நடிகர் அஜீத்குமார் வாழ்கை குறிப்புகள்

 


அஜித் குமார், தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவரது திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பும் மிக பெரிய வரவேற்பும் உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் "தல", "அல்டிமேட் ஸ்டார்", "காதல் மன்னன்" என்ற பெயர்களில் ரசிகர்கள் மூலம் அறியப்படுகிறார். தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் ஒரு பொறியாளராக புகழ் பெற்றுள்ளார்.

அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து தனது வாழ்வில் பல துறைகளில் பங்களித்து பணியாற்றி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராகவும், உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற்ற ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் 2018ம் ஆண்டு தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றுள்ளார்.

பிறப்பு / வாழ்க்கை

அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு ஹிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னர் தான் "அமராவதி" என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். 


அஜித் குமார், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான "ஷாலினி" என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆட்விக் என்ற மகனும் உள்ளனர்.

திரைப்பட தொடக்கம் / அனுபவம்

அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் தான் "அமராவதி" என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் "ஆசை" திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் "காதல் மன்னன்" எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் "காதல் மன்னன்" என்ற பெயரினை புனை பெயராக பெற்றுள்ளார்.

அஜித்குமார் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும்ப்லோ ப்ளாக் பஸ்டர் படமாக வெற்றி பெற்ற "தீணா" திரைப்படத்தில் இவர் ஏற்று  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. பின்னர் திரைப்பட ரசிகர்கள் இவரை "தல" என்ற பெயரினை கொண்டு அழைத்து வருகின்றனர்.

இவர் பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர், 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.

2014-ம் ஆண்டு புனே முதல் சென்னை வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.

2018-ம் ஆண்டி மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ட்ரான் விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளார். தக்ஷ என்று குழு பெயருடன் இவர் உதவியுள்ளார். இந்த குழுவினர் ஆஸ்திரேலியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சில் முதல் பரிசு பெற்றுள்ளனர்.

 ஆதாரம்: seithisolai.com

Comments

Popular posts from this blog

சுந்தர் பிச்சை அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்

நடிகர் சூரி வாழ்க்கை குறிப்புகள்