நடிகர் சூரி வாழ்க்கை குறிப்புகள்

 


தமிழ் திரையுலகில் தற்போது பிரபல முன்னணி காமெடி நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் சூரி ஆவார். இவருடைய நடிப்பு திறமையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவராக திகழ்கிறார்.  இவரைப் பற்றி அறியாத பல செய்திகளை நாம் தற்பொழுது காண உள்ளோம் அந்த வகையில் முதலாவதாக,

## நடிகர் சூரி மதுரையில் உள்ள ராஜாகூர் என்கின்ற கிராமத்தில் திரு முத்துசாமி  மற்றும் சேங்கையரசி தம்பதியர்களுக்கு பிறந்த ஆறு மகன்களில் ஒருவர் தான் நம்ம காமெடி நடிகர் சூரி.

## பரோட்டா என்றாலே பிடிக்காதே இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயர் வந்ததே விசித்திரமான ஒரு உண்மைதான். பரோட்டா காமெடியின் மூலம் தான் இவர் அனைவர் மனதையும் கவர்ந்தார்.

உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். Call: 8883509090

## ஏழாம் வகுப்பு வரை படித்து முடித்த இவர் குடும்ப வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைகளை செய்துவந்தார்.

## சூரியன் தந்தை மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடியவர் அதேசமயம் சூரியன் தந்தைக்கு இருந்த குடிப்பழக்கத்தால் இவரின் குடும்பமே வறுமையில் வாட ஆரம்பித்தது.

## வறுமை காரணமாகவும் நடிப்பிலும், நடனம் ஆடுவதிலும் இயற்கையாகவே அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பினார்.

வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்!

## சென்னைக்கு சென்றால் எப்படியாவது நடித்து சம்பாதித்து விடலாம் என்று சினிமா துறையை சுலபமாக நினைத்த சூரிக்கு அவர் நினைத்தபடி வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் சென்னை முழுவதும் சுற்றித் திரிந்தார்.

## அந்த நேரத்தில் எங்க அம்மா எனக்கு போன் பண்ணி சாப்டியான்னு கேட்டாங்க நான் பச்ச தண்ணி குடித்துவிட்டு படுத்து இருக்கேன்னு சொன்னேன் என் அம்மா கதறி அழுதுவிட்டு அங்கேயே மயங்கி விட்டார்கள்.

## வயிற்றுப் பசிக்காக சினிமாதான் தான் நடிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை மாற்றிக் கொண்ட இவர் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா? சொந்தமா ஒரு வெப்சைட் குறைந்த செலவில் போடுங்க.. டெமோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

## சென்னை உஸ்மான் ரோட்டில் உடைந்த வீடுகளில் உள்ள மணலை அள்ளும் டிப்பர் லாரி ஒன்றில் கிளீனராக வேலை செய்தார்.

## பெயிண்ட் அடிக்க பெயிண்ட் வாலி எடுத்துக் கொடுத்து உதவி செய்யும் வேலையை சென்னை முழுவதும் உள்ள பல இடங்களில் செய்து வந்தார்.

## மந்திரவாசல் என்கின்ற நாடகத்திற்காக மின் வேலைகள் செய்ய எலக்ட்ரீசியன்னாக சென்ற இவர் அந்த நாடகத்தில் சிறிய வேடம் ஒன்றில் திருடனாக தோன்றி நடித்தார்.

உடல் நலம் / மருத்துவ குறிப்புகள் படிக்க.  இங்கு கிளிக் செய்யுங்கள்!

## அதன் பிறகு நடிகர் கவுண்டமணி காலில் விழுந்து நடித்த தனது முதல் வசனத்தை பேசினார் சூரி அதற்கு கவுண்டமணி சூரிய தூக்கி எழுப்பி பணம் கொடுக்கிறார் இதெல்லாம் வேண்டாம் நீங்க வந்ததே போதும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடிகர் சூரி கிளம்பிவிட்டார் இந்த வசனமே சூரிய தனது திரை வாழ்க்கையில் முதன் முதலில் கூறிய வசனம் ஆகும்.

## அதன் பிறகு பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி திரு சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் உலகம் முழுவதும் பிரபலமான கையோடு அந்த ஆண்டிலிருந்து பரோட்டா சூரி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

## இந்த நிலையில் தனது பால்ய காலத்தில் மதுரையில் நெருங்கிய நண்பராக இருந்த திவாகர் என்பவரை சுமார் 7 ஆண்டுகள் கழித்து தேடிச் சென்றபோது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு சூரிய மனமுடைந்தார்.




## தல அஜித் அவர்கள் சூரியை இப்படியே இருங்கள் உங்கள் வாழ்க்கை மாறும் ஆனால் உங்கள் குணத்தை மட்டும் ஒருபோதும் மாற்றாதீர்கள் என்று அன்று அஜித் கொடுத்த அறிவுரை இன்றும் பின்பற்றி வருகிறார் சூரி.

## இந்த நிலையில் நடிகர் சூரி மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு வெண்ணிலா, சர்வான் என்கின்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.

## அதன் பிறகு சீமராஜா படத்தில் நடிப்பதற்காக தனது உடலை வருத்திக்கொண்டு சிக்ஸ் பக் வைத்துக் கொண்ட சூரி ஒரு பேட்டியில் தனது பழைய சோறு பச்சை மிளகாயையும் மிஸ் பண்ணினேன் என்று கூறியுள்ளார். பிரபல நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தும் தனது பழைய நிலையை மறக்காத சூரி அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

## உழைத்து சம்பாதித்து சினிமாவில் நல்ல நிலைக்கு வந்த சூரிக்கு தனது தாயாரை விமானத்தில் அழைத்து சென்று அழகு பார்க்கவேண்டும் ஆசையும் கனவும் நீண்ட காலமாக இருந்தது அதை நினைவாக்கும் வகையில் வானத்தில் மட்டுமே விமானத்தை பார்த்த தாய்க்கு விமான பயணி ஆக்கி அழகு பார்த்தார்.



## அந்த நிலையில் சூரி தன் அம்மாவிடம் விமானத்தில் போவது எப்படிமா இருக்கு என்று கேட்டுள்ளார் அதற்கு சூரியின் தாய் என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் பஸ் போல வராது என்று சொல்லி இருக்கிறார் நடிகர் சூரியின் தாய்.

## சூரியின் மகளுடன் படிக்கும் ஒரு தோழி உங்களுடைய ஆட்டோகிராஃப் வேண்டும் என அடம்பிடித்து கேட்டுள்ளார். என்னைப் போன்ற ரீல் ஹீரோக்களின் ஆட்டோகிராப் விட உன் தந்தையைப் போன்ற ரியல் ஹீரோக்களில் ஆட்டோகிராப் சிறந்தது என்று அந்த சிறுமியிடம் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்தச் சிறுமியிடம் நான் தான் உங்களுடைய தந்தையிடம் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

## சூரியுடன் பிறந்த ஐந்து சகோதரர்களும் இன்றுவரையும் கூட்டுக்குடும்பமாக  வாழ்ந்து வரும் நிலையில் தனது சகோதரர்களின் பிள்ளைகளுக்காக கல்வி உதவிகளையும் செய்து வருகிறார் நடிகர் சூரி.

## சினிமாவில் என்னதான் மிகவும் பிஸியாக இருந்தாலும் ஆண்டுதோறும் தனது சொந்த ஊரான மதுரை ராஜா கூறில் நடக்கும் காளியம்மன் கோவிலில் திருவிழாவுக்கு சென்று குயிலாட்டம் ஆடி வருகிறார்.



## இந்த நிலையில் இவர்கள் அம்மன் என்ற சிறு டீ கடையை நடத்தி வந்தனர் அதன்பிறகு  நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அம்மன் என்ற பெரிய ரெஸ்டாரன்ட் தோறந்தார் அதன் பிறகு அய்யன் என்ற மற்றொரு ஹோட்டலும் திறந்துள்ளார். தற்போது அம்மன் ரெஸ்டாரன்ட் மதுரையில் ஐந்தாவது இடத்தில் பிரபலமாக செயல்பட்டு வருகிறது.

## சூரியன் கனவுகளில் ஒன்று உன்ன நல்ல உணவு கூட இல்லாத நேரத்தில் நாம நல்ல நிலைக்கு வந்தால் குறைந்த விலையில் நல்ல தரமான உணவை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என ஆசைப்பட்டார். அந்த ஆசைக்கு இணங்க அம்மன் மற்றும் அய்யன் என்ற இரண்டு ரெஸ்டாரன்டையும் திறந்துள்ளார் என ஒரு பேட்டி ஒன்றில் சூரிய கூறியுள்ளார்.

## இந்த நிலையில் சூரியன் மகன் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாண்டு மேன் ஆப் தி மேட்ச் என்ற விருதை இந்திய அணியின் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் திரு அஸ்வின் கையால் பெற்றுக்கொண்டார்.

## கஜா புயலின் போது டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நடிகர் சூரி அங்கு மூன்று நாட்கள் தங்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவியையும், ஆறுதலையும் கொடுத்து வந்தார்.

## தற்போது கோரோனவால் பாதிக்கப்பட்ட நாடக நடிகர்களுக்கு நடிகர் சங்கம் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வேலம்மாள் கல்வி குழுமம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் உடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

தனது கடந்த காலத்தை பற்றி ஒரு துளியும் மறக்காத இவர் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் என்பது பெருமை தகுந்த ஒரு  செயலாகும்.

ஆதாரம்: tamil360newz.com



Comments

Popular posts from this blog

நடிகர் விஜய் வாழ்க்கை குறிப்புகள்

சுந்தர் பிச்சை அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்