ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக..
பிறப்பு
ஹிட்லர் 20 ஏப்ரல் 1889 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டில் உள்ள பிரவுனாவ் ஆம் இன் என்ற இடத்தில் பிறந்தார். அடால்ஃப் ஹிட்லர் என்பது இவரது முழுப்பெயர். இவரது தந்தையின் பெயர் அலாய்ஸ் ஹிட்லர் மற்றும் இவரது தாயின் பெயர் கிளாரா போல்ஸ். பெற்றோருக்கு நான்காவது மகனாக ஹிட்லர் பிறந்தார். இவரோடு 5 உடன் பிறந்தவர்களும் இருந்தனர்.
மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள்
இளமையும், கல்வியும்
ஹிட்லரின் சிறுவயது அவருக்கு மிகவும் கசப்பானதாகவே இருந்தது. தந்தை அலாய்ஸ் ஹிட்லர் மிகவும் கோபக்கார மனிதராக இருந்தார். ஹிட்லரையும், ஹிட்லரின் தாய் கிளாரா போல்ஸையும் அடித்து துன்புறுத்துவதி கொடுமைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இதனால் சிறு வயதிலேயே தனது தந்தையை தீவிரமாக வெறுத்தார் ஹிட்லர். தந்தையின் கொடுமையால் தனது தாய் கிளாரா அனுபவிக்கும் துன்பத்தை நினைத்து தாயின் மீது பேரன்பு கொண்டவராக இருந்தார் ஹிட்லர். ஹிட்லர் வருங்காலத்தில் ஒரு சுங்க அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் ஹிட்லருக்கு தான் ஒரு ஓவியராக வேண்டும் என்ற கனவு இருந்தது.
மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள்
ஆரம்பத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய ஹிட்லர் பிறகு கல்வியில் நாட்டம் இல்லாத மாணவனாக மாறினார். இதனால் பள்ளி ஆசிரியர்கள் ஹிட்லரை பற்றி அவரது பெற்றோரிடம் அடிக்கடி குறை கூறுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார்கள். 1903 ஆம் ஆண்டு ஹிட்லரின் தந்தை மரணமடைந்ததை தொடர்ந்து தனது பதினாறாவது வயதில் பள்ளிப்படிப்பை பட்டம் பெறாமலேயே இடையில் நிறுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது.
மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள்
வறுமையில் வாடிய குடும்பம்
தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது தாய் மற்றும் தங்கையுடன் ஹிட்லர் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்க்கையை நடத்தினார். ஹிட்லரின் தாய் கிளாராவுக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையின் மூலமாகவே அவர்களின் குடும்பம் அனைத்து அடிப்படை தேவைகளையும் சமாளித்தது. 1909ஆம் ஆண்டு ஹிட்லரின் தாயும் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து ஹிட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையுடன் தனது தங்கையையும் கவனித்து மிக மோசமான வறுமை நிலையில் வாழ்ந்தார். பிறகு தனது ஓவியங்களை வணிகர்களிடம் விற்று அதன் மூலம் வந்த வருமானத்தில் வறுமையில் இருந்து ஓரளவுக்கு மீண்டார் ஹிட்லர்.
மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள்
ஹிட்லர் யூதர்களை கொல்ல காரணம்
ஹிட்லர் இளம் பருவத்திலேயே யூத இன எதிர்ப்பு என்ற கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். யூத இன எதிர்ப்பு சார்ந்த பல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. கிறிஸ்தவ புராட்டஸ்டண்ட் மதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் என்பவர் யூதர்களுக்கு எதிராக எழுதிய 'யூதர்களும் அவர்களின் பொய்மையும்' என்ற புத்தகம் தான் ஹிட்லரை ஒட்டுமொத்த யூத மக்களின் தீவிர வெறுப்பாளனாக மாற்றியதாக அவர் கூறியுள்ளார்.
முதலாம் உலகப் போர்
1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரில் போரிடுவதற்காக ஜெர்மனி ராணுவத்தில் ஹிட்லர் சேர்ந்தார். 16வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட ஹிட்லருக்கு பல்வேறு சவால்கள் வந்தன. அனைத்தையும் சிறப்பாக கையாண்டு எதிரிகளைத் தாக்கினார். எதிரிகளால் தாக்கப்பட்டு படுகாயங்களையும் அடைந்தார் ஹிட்லர். 1914 ஆம் ஆண்டு வெறும் 20 நாட்களில் 40,000 அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்பட்ட 'ஒய்பெர்ஸ்' தாக்குதலில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் ஹிட்லர்.
மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள்
1918 இல் நடைபெற்ற நச்சு காற்று குண்டு தாக்குதலில் ஹிட்லர் பலத்த காயம் அடைந்தார். தற்காலிகமான கண் பார்வை இழப்பும் அவருக்கு அந்த தாக்குதலால் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து ஜெர்மனிக்காக போரிட வேண்டும் என்பதில் மிக உறுதயான நிலைப்பாட்டில் இருந்தார். ஹிட்லர் பிறப்பால் ஒரு ஆஸ்திரிய நாட்டை சார்ந்தவர் என்றாலும் ஜெர்மனி நாட்டின் மீது அளவு கடந்த தேசப்பற்று கொண்டிருந்தவராக திகழ்ந்தார. 1918 திடீரென்று ஜெர்மனி போரில் சரணடைந்து விட்டது. இந்த முடிவால் ஹிட்லர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஜெர்மனி பல தரப்பட்ட இழப்புகளை சந்தித்தது.
அரசியலில் ஹிட்லர்
முதலாம் உலகப்போரில் சாதாரண ராணுவ வீரராக பணியாற்றிய ஹிட்லர், ஜெர்மனியின் தோல்வியை தொடர்ந்து 1919 ஆம் அரசியலில் நுழைந்தார். ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார் ஹிட்லர். பிறகு 1921 இல் நாசி கட்சியின் தலைவர் பதவிக்கு உயர்ந்தார். 1923 இல் செய்த முனிச் சதி தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து ஹிட்லர் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஓராண்டு சிறைவாசத்தை அனுபவித்து 1924 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு யூத இன எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு போன்றவற்றை மக்களிடம் தீவிரமாக பிரச்சாரம் செய்து பரப்பினார். இதனால் மக்களின் பெரும் ஆதரவு ஹிட்லருக்கு கிடைத்தது.
மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள்
ஜெர்மன் அதிபர்
1933 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாசி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றார் ஹிட்லர். ஜெர்மனியில் இருந்த யூத மக்களை வெளியேற்றுவது, முதலாம் உலகப் போரில் வென்ற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சர்வதேச ஆதிக்கத்தை எதிர்ப்பது முதலியவற்றை ஹிட்லர் தனது முக்கிய கொள்கைகளாக கொண்டிருந்தார். முதலாம் உலகப் போரால் ஜெர்மனிக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவதில் ஈடுபட்டார். சரிந்து கிடந்த பொருளாதாரத்தை தனது ஆறு ஆண்டு ஆட்சிக் காலத்திலேயே பல மடங்கு உயர்த்தினார்.
இரண்டாம் உலகப் போர்
1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர். இதனால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜெர்மனிக்கு எதிராக கிளம்பின. 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக படையெடுப்பைத் தொடங்கினார். வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகள் ஜெர்மன் வசம் வந்தன. அதே ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு எதிராக படை எடுத்தார்.
திருமணம்
இரண்டாம் உலக போரின் இறுதி கட்டத்தில், போர் நடந்து கொண்டிருக்கும் போதே தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவா பிரான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அடால்ஃப் ஹிட்லர்.
மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள்
ஜெர்மன் தோல்வி
போரின் இறுதிக்கட்டத்தில் ஜெர்மனி மீது பிரான்சு, அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் நாடுகள் எல்லாம் சேர்ந்து குண்டு மழையை பொழிந்தன. ஏப்ரல் 30, 1945 ஆம் ஆண்டு ஜெர்மனி வேறு வழியின்றி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது.
தற்கொலை செய்து கொண்ட ஹிட்லர்
எதிரிகளிடம் ஒருபோதும் தான் சிக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஹிட்லர். இதனால் தனது மனைவி இவா பிரானுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். தனது உடல் எதிரிகளிடம் சென்று விடக்கூடாது என்பதை தற்கொலை செய்யும் முன்னரே உடன் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டார். ஹிட்லர் மற்றும் அவரது மனைவி இவா பிரான் தற்கொலை செய்துகொண்ட பின் அவர்கள் இருவரின் உடல்களும் உடன் இருந்தவர்களால் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் சில வரலாற்று ஆய்வாளர்கள் ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனால் இன்றுவரை அவரது மரணம் ஒரு மர்மமான விஷயமாகவே கருதப்படுகிறது.
Thanks with Source: tamilinfohub.online
மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள்
Comments
Post a Comment