ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக..
பிறப்பு ஹிட்லர் 20 ஏப்ரல் 1889 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டில் உள்ள பிரவுனாவ் ஆம் இன் என்ற இடத்தில் பிறந்தார். அடால்ஃப் ஹிட்லர் என்பது இவரது முழுப்பெயர். இவரது தந்தையின் பெயர் அலாய்ஸ் ஹிட்லர் மற்றும் இவரது தாயின் பெயர் கிளாரா போல்ஸ். பெற்றோருக்கு நான்காவது மகனாக ஹிட்லர் பிறந்தார். இவரோடு 5 உடன் பிறந்தவர்களும் இருந்தனர். மேலும் : **வாழ்க்கை வரலாறு **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள் இளமையும், கல்வியும் ஹிட்லரின் சிறுவயது அவருக்கு மிகவும் கசப்பானதாகவே இருந்தது. தந்தை அலாய்ஸ் ஹிட்லர் மிகவும் கோபக்கார மனிதராக இருந்தார். ஹிட்லரையும், ஹிட்லரின் தாய் கிளாரா போல்ஸையும் அடித்து துன்புறுத்துவதி கொடுமைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இதனால் சிறு வயதிலேயே தனது தந்தையை தீவிரமாக வெறுத்தார் ஹிட்லர். தந்தையின் கொடுமையால் தனது தாய் கிளாரா அனுபவிக்கும் துன்பத்தை நினைத்து தாயின் மீது பேரன்பு கொண்டவராக இருந்தார் ஹிட்லர். ஹிட்லர் வருங்காலத்தில் ஒரு சுங்க அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் ஹிட்லருக்கு தான் ஒரு...